தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சுடுகாடு சாலை பணியை விரைந்து துவக்க கோரிக்கை 

சுடுகாடு சாலை பணியை விரைந்து துவக்க கோரிக்கை 

சுடுகாடு சாலை பணியை விரைந்து துவக்க கோரிக்கை 


UPDATED : மே 31, 2026 10:08 PM

ADDED : மே 31, 2026 10:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 31, 2026 10:08 PM ADDED : மே 31, 2026 10:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திட்டக்குடி:கூடலுாரில் கிடப்பில் போடப்பட்ட சுடுகாடு சாலை பணியை விரைந்து துவக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திட்டக்குடி அடுத்த கூடலுார் ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள சுடுகாடு சாலையை பயன்படுத்தி கூடலுார் மற்றும் அரியலுார் மாவட்டம், த.கூடலுார், தளவாய், சன்னாசிநல்லுார், அங்கனுார், செங்கமேடு, மதுராநகர் உட்பட 10க்கும் மேற்பட்ட திட்டக்குடி, பெண்ணாடம், செந்துறை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இச்சாலையை பல ஆண்டுகளாக சீரமைக்காததால் குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலைக்கு மாறியது.

அதைத்தொடர்ந்து, கடந்த இரு மாதங்களுக்கு முன் சாலையை பொக்லைன் உதவியுடன் ஜல்லிகள் பெயர்க்கப்பட்டது.

ஆனால் இதுவரை சாலை பணிகள் துவங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் இவ்வழியே செல்லும் கிராம மக்கள் கடும் அவதி அடைகின்றனர்.

எனவே, கிடப்பில் போடப்பட்ட கூடலுார் சுடுகாடு சாலைப்பணியை விரைந்து துவக்க ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us