பழைய பஸ் நிலையத்தில் பஸ்கள் நின்று செல்ல கோரிக்கை
பழைய பஸ் நிலையத்தில் பஸ்கள் நின்று செல்ல கோரிக்கை
ADDED : மே 30, 2026 05:50 AM
மந்தாரக்குப்பம்: பழைய பஸ் நிலையம் முன்பு பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
என்.எல்.சி., சுரங்க விரிவாக்க பணிகளுக்காக மந்தாரக்குப்பம் பழைய பஸ் நிலையம் அகற்றப்பட்டு வடக்குவெள்ளுர் பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டு பயணிகள் பயன்பாட்டில் உள்ளது.
மந்தாரக்குப்பம் பழைய பஸ் நிலையம் முன்பு உள்ள தேசிய நெடுஞ்சாலையில், புதிய பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா கடந்த சில மாதங்கள் முன்பு நடந்தது.
பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடையில் பயணிகள் பஸ்சுக்காக காத்திருக்கும் போது இப்பகுதியில் பஸ்கள் நிற்காமல் செல்வதால் பயணிகள் சரியான நேரத்திற்கு தங்களது ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
எனவே பஸ் நிலையம் முன்பு அனைத்து பஸ்களும் நின்று செல்ல போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
