/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெல் கொள்முதல் நிலையம் திறக்க அரசுக்கு கோரிக்கை
/
நெல் கொள்முதல் நிலையம் திறக்க அரசுக்கு கோரிக்கை
ADDED : ஜன 06, 2025 10:31 PM
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால், குறைந்த விலைக்கு நெல்லை விற்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
நெல்லிக்குப்பத்தில் கடந்த 4 ஆண்டுகளாக தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டது.
விவசாயிகள் தனியார் வியாபாரிகளை நம்பாமல் அரசின் நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்பனை செய்தனர். இதனால் மூட்டைக்கு 500 ரூபாய் வரை கூடுதலாக வருமானம் கிடைத்தது.
தற்போது சம்பா பட்ட நெல் அறுவடை துவங்கியுள்ளது. ஆனால் இதுவரை கொள்முதல் நிலையம் திறக்கவில்லை. இதனால் அறுவடை செய்யும் நெல்லை விவசாயிகள் தனியார் வியாபாரிகளிடம் விற்கலாம் என நினைத்தனர். ஆனால் அவர்களோ கடந்த 4 ஆண்டுகளாக தங்களிடம் விற்பனை செய்யாமல் அரசின் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ததால் ஆத்திரத்தில் மிகவும் குறைவான விலைக்கு கேட்கின்றனர். கடந்த ஆண்டு 2100 வரை விற்பனையான பி.பி.டி.ரக நெல்லை 1400 க்கு கேட்கின்றனர்.
வேறு வழியின்றி விவசாயிகள் தனியாரிடம் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
விவசாயிகள் நலன்கருதி உடனடியாக தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.