தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ உள்நாட்டு எண்ணெயை பயன்படுத்த கோரிக்கை

 உள்நாட்டு எண்ணெயை பயன்படுத்த கோரிக்கை

 உள்நாட்டு எண்ணெயை பயன்படுத்த கோரிக்கை


ADDED : மார் 12, 2026 04:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 04:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: வெளிநாட்டு சமையல் எண்ணெய் வரத்தில், தாமதம் நிலவுவதால், உள்நாட்டு எண்ணெய் வகைகளை இல்லத்தரசிகள் பயன்படுத்த வேண்டும் என வியாபாரிகள் சங்க நிர்வாகி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் செல்லப்பாண்டியன் கூறியதாவது:

ஈரான் நாட்டுடன் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் நடத்தும் போர் காரணமாக இறக்குமதி சமையல் எண்ணெய், சூரியகாந்தி, பாமாயில் எண்ணெய் வரத்தில் தாமதம் உள்ளதால், ஒரு வாரத்தில் லிட்டருக்கு 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.

சில்லறை விற்பனையில் பாமாயில் ஒரு லிட்டர், 130 ரூபாயிலிருந்து, 140 ரூபாயாகவும், ரீபண்ட் சூரியகாந்தி எண்ணெய் 170 ரூபாயிலிருந்து 180 ரூ பாயாகவும் உயர்ந்துள்ளது. இ தனை கருத்தில் கொண்டு இல்லத்தரசிகள் உள்நாட்டு தயாரிப்பான கடலை எண்ணெய், ரைஸ் பிராண்ட் எண்ணெய் போன்றவற்றை உபயோக படுத்த வேண்டும்.

உள்நாட்டு எண்ணெயை உபயோகப்படுத்தி விவசாயத்திற்கும், உள்நாட்டு வணிகத்தின் வளர்ச்சிக்கும் பங்காற்ற வேண்டும். மேலும் உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்ததாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us