ADDED : நவ 03, 2024 06:55 AM

கடலுார்: குமராட்சியில் மாவட்ட வேளாண இணை இயக்குனர் திட்டப் பணிகள் செயலாக்கம் குறித்து ஆய்வு செய்தார்.
குமராட்சி, பூலாமேடு, தவர்த்தாம்பட்டு, வானதிராயபுரம் உள்ளிட்ட கிராமங்களில் ஒரு கிராமம் ஒரு பயிர் திட்ட மாதிரி பண்ணைத் திடல், உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்க திட்டத்தின் கீழ் பயிர் அடிப்படையிலான செயல்விளக்கத் திடல் ஆகியவற்றை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் ஆய்வு செய்தார்.
பின், இத்திட்டப் பணிகளின் செயலாக்கம் மற்றும் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார். தொடர்ந்து, பூச்சி நோய் மேலாண்மையில் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெறவும் ஆலோசனை வழங்கினார். வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தமிழ்வேல், உதவி வேளாண்மை அலுவலர்கள் பிரகாஷ், பாரதிதாசன் உடனிருந்தனர்.