தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குடிமனை பட்டா கோரிக்கை மாநாடு

 குடிமனை பட்டா கோரிக்கை மாநாடு

 குடிமனை பட்டா கோரிக்கை மாநாடு


ADDED : ஜன 11, 2026 06:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 11, 2026 06:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மந்தாரக்குப்பம்: ஊமங்கலத்தில் மா.கம்யூ., கட்சி சார்பில் குடிமனை பட்டா கோரிக்கை மாநாடு நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு உறுப்பினர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் ரமேஷ்பாபு மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாலி எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட குழு உறுப்பினர் ஜெயராமன், ஒன்றிய செயலாளர் கலைசெல்வன், மாவட்ட செயலாளர் அசோகன், உட்பட பலர் பேசினர்.

அதில் பயன்பாட்டில் இல்லாத நீர்நிலை புறம்போக்குகளை வகை மாற்றம் செய்து வீடற்ற மக்களுக்கு பட்டா வழங்கிட கோரியும், கோவில் நிலங்களில் தோப்பு, புறம் போக்கு நிலங்களில் பல ஆண்டு காலமாக வீடு கட்டி குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டா வழங்கிட வலியுறுத்தியும், பல ஆண்டுகளாக மனு கொடுத்து காத்திருக்கும் வீடற்ற மக்கள் அனைவருக்கும் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கிட கோரியும், பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

நிர்வாகிகள் அன்புசெல்வி, கனகராஜ், ரங்கசாமி, சுந்தரவடிவேல், வேலன், பாலாஜி, திருலோகசந்தர், சக்திவேல், தமிழ்மணி, சுதாகர் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us