UPDATED : அக் 11, 2026 08:27 PM
ADDED : அக் 11, 2026 08:24 PM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார், கூத்தப்பாக்கம் நுழைவு வாயில் அருகில், குடியிருப்போர் சங்கத்தினர் துாய்மை பணி மேற்கொண்டனர்.
பி.என்.எம்.பி., குடியிருப்போர் சங்கத் தலைவர் குமார், கவுரவத் தலைவர் சுப்ரமணியம் தலைமை தாங்கினர். செயலாளர் மணிகண்டன், பொருளாளர் பொன்னழகன், துணைத் தலைவர் ரவி, செயற்குழு உறுப்பினர்கள் செல்வகுமார கண்ணன், சடையப்பன், பாலு, வெற்றிவேல், ராமநாதன் நகர் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் செல்வம், சரவணன் ஆகியோர் துாய்மை பணி செய்தனர். தொடர்ந்து, மரக்கன்று நட்டு வைத்து, ‘குப்பை கொட்டக் கூடாது’ விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பேனர் வைத்தனர்.
