ADDED : ஆக 18, 2025 12:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி; புவனகிரியில் காங்., சார்பில் சுதந்திர தின விழா நடந்தது.
புவனகிரி காய்கறி அங்காடி அருகில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்டத் துணைத் தலைவர் விநாயகம் தலைமை தாங்கினார்.
வக்கீல் செல்வகுமார், நிர்வாகிகள் சம்பத், மாசிலாமணி, சுதர்சனம், வெங்கடேசன், ராமதாஸ், நாகராஜன் முன்னிலை வகித்தனர். பன்னீர்செல்வம் வரவேற்றார்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில் வேலன் தேசியக் கொடியேற்றினார். நிர்வாகிகள் பெருமாள், லாரன்ஸ், சையது ஜாபர், ராமலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.