தேர்தல் துண்டு பிரசுரங்கள் அச்சடிக்க கட்டுப்பாடு
தேர்தல் துண்டு பிரசுரங்கள் அச்சடிக்க கட்டுப்பாடு
ADDED : மார் 25, 2026 11:02 PM
மந்தாரக்குப்பம்: அரசியல் கட்சியினர் தேர்தலுக்கு துண்டு பிரசுரங்கள், போஸ்டர்கள், பேனர்கள் அச்சடிக்க தேர்தல் கமிஷன் கட்டுப்பாடு விதித்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதில் அரசியல் கட்சிகள் துண்டு பிரசுரங்கள், போஸ்டர்கள், பிளக்ஸ் பேனர்கள் உள்ளிட்டவைகளை அச்சடிக்கும் முன் சம்பந்தம்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் காண்பித்து முன் அனுமதி பெற வேண்டும்.
அச்சடித்த பின் அதன் நகலை காண்பித்து ஒப்புதல் பெற வேண்டும். அச்சடிக்கப்பட்டுள்ள எண்ணிக்கை குறித்த விவரத்தை தெரிவிக்க வேண்டும். துண்டு பிரசுரங்கள் வெளியிடும் போது வெளியிடுபவரின் பெயர், அச்சகத்தின் பெயர் கண்டிப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் விதிகளுக்கு மீறி அச்சடிக்கப்பட்டிருந்தால் அந்த அச்சகத்தின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
