ADDED : நவ 02, 2026 05:47 PM
அ நிறம் | அளவு
கடலுார்: ஓய்வு பெற்ற அரசு பள்ளி அலுவலக உதவியாளர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலுார், அரிசி பெரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் பரமசிவம்,72; பெரியக்குப்பம் அரசு பள்ளியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர், கடந்த 15 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால், மனமுடைந்த அவர், நேற்று (நவ.,1) வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்பாதிரி்ப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
