/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
/
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 23, 2024 06:26 AM

கடலுார் : தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர், ஓய்வூதிய இயக்குனரகம் உள்ளிட்ட துறைகளை கருவூல கணக்குத்துறையுடன் இணைக்கப்பட்டதை திரும்ப பெறக்கோரி, கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டத் தலைவர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இளங்கோவன் துவக்க உரையாற்றினார்.
கருவூல கணக்குத் துறை அலுவலர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் பாலகிருஷ்ணன், கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.
வணிகவரி பணியாளர் சங்க மாநிலத் தலைவர் ஜனார்த்தனன், சிறப்புரையாற்றினார்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில பொருளாளர் பாலசுப்ரமணியன், மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தனித்துவமாக இயங்கி வந்த ஓய்வூதிய இயக்குனரகம், அரசு தகவல்தொகுப்பு விவர மையம் மற்றும் சிறுசேமிப்பு இயக்குனரகம் ஆகிய துறைகளை தமிழ்நாடு கருவூல கணக்குத்துறையுடன் இணைத்ததை திரும்ப பெறக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.