/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஓய்வுபெற்ற அலுவலர் சங்க ஆலோசனை கூட்டம்
/
ஓய்வுபெற்ற அலுவலர் சங்க ஆலோசனை கூட்டம்
ADDED : பிப் 03, 2025 10:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுார் வட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
வட்டக்கிளை தலைவர் ஜெகரட்சகன் தலைமை தாங்கினார். வட்டக்கிளை செயலாளர் சண்முகம் வரவேற்றார். இதில், வரும் 12ம் தேதி விருத்தாசலத்தில் நடைபெற உள்ள மாவட்ட நிர்வாகிகள் குறித்து ஆலோசனை செய்தனர்.
மேலும், 70 ஆண்டு வயது மூத்தோருக்கு கூடுதலாக 10 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அப்போது, செயற்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், சிங்காரம், சையத் ஷாஜகான், மகாலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வட்டக்கிளை துணைத் தலைவர் நல்லதம்பி நன்றி கூறினார்.