/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் முதல்வருக்கு நன்றி
/
ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் முதல்வருக்கு நன்றி
ADDED : ஏப் 21, 2025 11:11 PM
கடலுார்::
தமிழ்நாடு அரசு அனைத்து கோப்புகளையும் தமிழிலேயே கையாள வேண்டும் என அரசாணை வெளியிட்டதற்கு, ஓய்வு பெற்ற அலுவலர் சங்க மாவட்ட பிரசார செயலாளர் சிங்காரம் நன்றி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவத்துறை அமைச்சுப்பணியாளர் செயல்திறன் கூட்டு இயக்கம் சார்பில் அனைத்து அரசாணைகளையும் தமிழில் வெளியிட வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுத்தோம்.
அதை நிறைவேற்றும் வகையில் தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசாணை வெளியிட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
நடப்பு சட்டசபை கூட்டத்தொடரிலேயே மத்திய அரசு அறிவித்துள்ளது போல மாநில அரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு இரண்டு சதவீத அகவிலைப்படியை கடந்த ஜனவரி 2025 முதல் ரொக்கமாக வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.