/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வருவாய்த்துறை ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்
/
வருவாய்த்துறை ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்
வருவாய்த்துறை ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்
வருவாய்த்துறை ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்
ADDED : செப் 30, 2025 06:35 AM

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட மனுக்கள் மீது முடிவு செய்திட போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும். ஆய்வுக்கூட்டம் என்ற பெயரில் அளவு கடந்த பணி நெருக்கடிகள் ஏற்படுத்துவதை கைவிட வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் அனைத்து காலிப்பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டப்பணிகளை புறக்கணித்து இரண்டு நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று மாவட்டம் முழுவதும் உள்ள 10 தாலுகா அலுவலகங்கள், மூன்று ஆர்.டி.ஓ.,அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பணிபுரியும் 500க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து அலுவலக பணிகளில் ஈடுபட்டனர்.
கடலுாரில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் மகேஷ் தலைமையில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம், நில அளவைத் துறை ஒன்றிப்பு, வருவாய் கிராம ஊழியர் சங்கம் உள்ளிட்ட சங்கங்களைச் சேர்ந்த அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.