ADDED : ஏப் 08, 2025 04:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் கடலுார் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் மகேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் ரத்தினகுமரன், மாவட்ட துணை தலைவர்கள் பூபாலச்சந்திரன், ஆறுமுகம், மத்திய செயற்குழு உறுப்பினர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். இதில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைவருக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

