/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் நகராட்சி திட்ட பணிகள் அமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம்
/
சிதம்பரம் நகராட்சி திட்ட பணிகள் அமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம்
சிதம்பரம் நகராட்சி திட்ட பணிகள் அமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம்
சிதம்பரம் நகராட்சி திட்ட பணிகள் அமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம்
ADDED : நவ 11, 2025 06:29 AM

சிதம்பரம்: சிதம்பரம் நகராட்சியில் நடந்து வரும் திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது.
சிதம்பரம் நகராட்சியில் 400 கோடி மதிப்பில் பல்வேறு திட்ட பணிகள் நடந்து வருகிறது. இதில், ரூ. 208 கோடியில் நடக்கும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், நேற்று கடலுார் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில், வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடந்தது.
நகரமன்ற துறை தலைவர் முத்துகுமரன், நகராட்சி ஆணையர் மல்லிகா, பொறியாளர் சுரேஷ், குடிநீர்வடிகால் வாரிய செயற்பொறியாளர் வினோத்ராஜா உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், அமைச்சர் பன்னீர்செல்வம் ஒவ்வொரு துறை அதிகாரிகளையும் எழுப்பி, கடந்த முறை கூட்டத்தில் ஆலோசித்த பணிகளில் எவை முடிந்தது என கேட்டறிந்தார்.
மழை நீர் வடிகால் பணிகள், புதிய பஸ் நிலையம், புதிய காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். நகராட்சி ஆணையர் மற்றும் பொறியாளர் இருவரும் இணைந்து பணியாற்றி பணிகளை விரைவாக முடிக்கவும், கூட்டு குடி நீர் திட்ட பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

