தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஆசிரியர்களுக்கு மீளாய்வு பயிற்சி

ஆசிரியர்களுக்கு மீளாய்வு பயிற்சி

ஆசிரியர்களுக்கு மீளாய்வு பயிற்சி


ADDED : பிப் 20, 2024 02:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2024 02:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம் : விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் உள்ள கலையரங்கத்தில், அரசு பள்ளி ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கான மீளாய்வு பயிற்சி கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு, டி.இ.ஓ., துரைப்பாண்டியன் தலைமை தாங்கினார். விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வினோத்குமார் முன்னிலை வகித்தார்.

பள்ளி துணை ஆய்வாளர் சிவாஜி வரவேற்றார். சத்தியமங்கலம் அரசு மேல்நிலை பள்ளி நல்லாசிரியர் திலீப் கலந்துகொண்டு, ஆங்கில பாடம் நடத்தும் முறையில், ஆசிரியர்கள் பயன்படுத்த வேண்டிய எளிய கற்பித்தல் நுணுக்கங்கள் குறித்து விளக்கி பேசினார்.

இதில், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 195 ஆங்கில பட்டதாரி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

முடிவில் சாத்துக்கூடல் அரசு உயர்நிலை பள்ளி ஆசிரியர் சுலோச்சனா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us