ADDED : மார் 01, 2026 05:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் சுற்றுப் பகுதிகளில், நெல் அறுவடை செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.
புதுச்சத்திரம் அடுத்த பூவாலை, வயலாமூர், அலமேலுமங்காபுரம், மணிக்கொல்லை, வேளங்கிப்பட்டு, பால்வாத்துண்ணான், சேந்திரக் கிள்ளை, தச்சக்காடு, வல்லம் உள்ளிட்ட பகுதிகளில் இந்தாண்டு சம்பா சாகுபடிக்கு நெல் பயிரிட்டனர்.
இந்நிலையில் நெற்பயிர்கள் வளர்ந்து, தற்போது அறுவடை செய்யும் நிலையில் உள்ளது. அதையொட்டி இப்பகுதி விவசாயிகள், நெல் அறுவடை செய்யும் இயந்திரம் மூலம், நெல் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சத்திரம் சுற்றுப் பகுதிகளில், வெளியூர்களில் இருந்து வந்த, ஏராளமான நெல் அறுவடை செய்யும் இயந்திரங்கள் மூலம், நெல் அறுவடை செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.

