/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ரகளை: குறிஞ்சிப்பாடி நபர் மீது வழக்கு
/
ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ரகளை: குறிஞ்சிப்பாடி நபர் மீது வழக்கு
ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ரகளை: குறிஞ்சிப்பாடி நபர் மீது வழக்கு
ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ரகளை: குறிஞ்சிப்பாடி நபர் மீது வழக்கு
ADDED : ஆக 07, 2025 02:56 AM
கடலுார்: கடலுார் ஆர்.டி.ஓ.,வை பணி செய்ய விடாமல் தடுத்தவர் மீது, புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் பாண்டுரங்கன். இவர் தனது வெடிபொருள் விற்பனை உரிமத்தை புதுப்பிக்க நேற்று மாலை கடலுார் மஞ்சக்குப்பத்திலுள்ள ஆர்.டி.ஓ., அலுவலகம் வந்தார்.
ஆர்.டி.ஓ.,வை சந்திக்க அவரது அறைக்கு சென்றபோது அங்கிருந்த உதவியாளர், ஆர்.டி.ஓ., முக்கிய வேலையாக இருப்பதாக கூறினார்.
அதையும் மீறி உள்ளே சென்ற பாண்டுரங்கன், ஆர்.டி.ஓ.,அபிநயாவிடம் ஒருமையில் பேசி, பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார்.
இதுகுறித்து ஆர்.டி.ஓ.,அபிநயா கொடுத்த புகாரின் பேரில் புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.