ADDED : பிப் 13, 2024 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: காராமணிக்குப்பம் சந்தையில், சாலையோர கடைகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பத்தில் திங்கள் கிழமை வாரச்சந்தை நடந்து வருகிறது.
.அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த இடத்தில் போதுமான இடவசதி உள்ளதால் சாலையோரம் கடை போட கூடாது என, கட்டுப்பாடு விதித்து, வேலி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை மீறி, கடலுார்- பண்ருட்டி சாலையில் 50 க்கும் மேற்பட்ட கடைகள் போடப்பட்டு வருகிறது. கடையையொட்டி, வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. சாலையிலேயே மக்கள் நின்று பொருட்கள் வாங்குவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.
எனவே, சாலையோரம் கடைபோடுவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.