sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 டிரான்ஸ்பார்மர் மின் கம்பங்கள் முறிந்து விழும் அபாயம்

/

 டிரான்ஸ்பார்மர் மின் கம்பங்கள் முறிந்து விழும் அபாயம்

 டிரான்ஸ்பார்மர் மின் கம்பங்கள் முறிந்து விழும் அபாயம்

 டிரான்ஸ்பார்மர் மின் கம்பங்கள் முறிந்து விழும் அபாயம்


ADDED : பிப் 26, 2026 05:13 AM

Google News

ADDED : பிப் 26, 2026 05:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு: டிரான்ஸ்பார்மர் மின் கம்பங்கள் முறிந்து விழும் நிலையில் உள்ளதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

வளையமாதேவி, துணைமின் நிலைய கட்டுப்பாட்டில், எறும்பூர் சிவன்கோவில் அருகே டிரான்ஸ்பார்மர் உள்ளது.

இந்த டிரான்ஸ்பார்மர் மின்பெட்டியிலிருந்து கிராமத்தில் உள்ள வீடுகளுக்கும், வயல்வெளி மின்மோட்டார்கள் பகுதிகளுக்கும் மின்சாரம் செல்கிறது.

டிரான்ஸ்பர் மின் கம்பங்கள் கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்டுள்ள நிலையில், மின்பெட்டியை தாங்கும் தன்மை இழந்து சிமெண்ட் காரைகள் பெயர்ந்துள்ளன. தற்போது, இரண்டு கம்பங்களுமே முறிந்து விழும் அபாய நிலையில் உள்ளன.

டிரான்ஸ்பார்மர் மின்பெட்டியில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் மின் ஊழியர்கள் கம்பத்தில் ஆபத்தான முறையில் சரி செய்து வருகின்றனர்.

இதனால், மின்கம்பங்கள் இரண்டையும் அகற்றிவிட்டு புதிய மின்கம்பங்கள் நட்டு சீரமைக்க மின்துறை அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த பலனும் இல்லை. டிரான்ஸ்பார்மர் மின்பெட்டி உள்ள இடத்தில் வீடுகள், மக்கள் வந்துசெல்லும் கோவில் வளாகம் உள்ளது. இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.






      Dinamalar
      Follow us