ADDED : ஜன 23, 2026 06:40 AM

அ நிறம் | அளவு
குள்ளஞ்சாவடி: அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சாலை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் (விழுப்புரம்) சார்பில், நேற்று குள்ளஞ்சாவடி பஸ் நிறுத்தத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதில், பஸ் படிக்கட்டுகளில் பயணம் செய்வதால் ஏற்படும் ஆபத்து; ஓடும் பஸ்சில் ஏறி இறங்குவதால் ஏற்படும் அபாயம்; இரு சக்கர வாகனங்களில் செல்லும் போது தலைக்கவசம் அணிவதன் அவசியம்; என்பன உள்ளிட்டவைகள் குறித்து துண்டு பிரசுரங்களை, போக்குவரத்து கழக ஊழியர்கள் வழங்கினர்.
மேலும், சாலை பாதுகாப்பு மாதம் கடைப்பிடிப்பது குறித்து போக்குவரத்து கழக ஊழியர்கள் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.
