ADDED : பிப் 17, 2024 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : தொழிலாளர் நல சட்டத் திருத்தங்களை வாபஸ் பெற வேண்டும். நுாறு நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயர்த்த வேண்டும். பொதுத்துறை விற்பனையை ரத்து செய்ய வேண்டும்.
விவசாயிகளின் விளை பொருட்களுக்கு ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விருத்தாசலத்தில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில், சாலை மறியல் நடந்தது. சி.ஐ.டி.யூ., மாநிலக்குழு ஜீவானந்தம் தலைமை தாங்கினார். மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.