/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாலை மறியல் முயற்சி: த.வெ.க.,வினர் 124 பேர் கைது
/
சாலை மறியல் முயற்சி: த.வெ.க.,வினர் 124 பேர் கைது
ADDED : டிச 31, 2024 06:53 AM

கடலுார்: புஸ்சி ஆனந்த் கைது கண்டித்து, கடலுார் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மறியலில் ஈடுபட்ட த.வெ.க., வினர் 124 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து த.வெ.க., தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையை, கட்சியின் நிர்வாகிகள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இவர்களை விடுவிக்க கோரிய கட்சி பொதுச் செயலாளர் ஆனந்த் கைது செய்யப்பட்டார்.
இதை கண்டித்து, கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில், அக்கட்சி மாவட்ட நிர்வாகிகள் சீனு, ராஜசேகர், ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர், அவர்கள் 58 பேரை போலீசார் கைது செய்தனர்.
அதே போன்று, விருத்தாசலத்தில் மாவட்ட நிர்வாகி விஜய் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட முயன்ற 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணாடத்தில் மாவட்ட நிர்வாகி ராஜேஷ் தலைமையில் அக்கட்சியினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, திடீரென விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அங்கிருந்த இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட 24 பேரை கைது செய்தனர். அதேபோன்று
ராமநத்தம் பஸ் நிறுத்தத்தில், த.வெ.க., மாவட்ட நிர்வாகி கண்ணதாசன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 22 பேரை போலீசார் கைது செய்தனர். மாவட் டத்தில் மொத்தம் 124 பேர் கைது செய்யப்பட்டனர்.