தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அடிப்படை வசதிகள் கோரி சாலை மறியல் முயற்சி

 அடிப்படை வசதிகள் கோரி சாலை மறியல் முயற்சி

 அடிப்படை வசதிகள் கோரி சாலை மறியல் முயற்சி


ADDED : பிப் 07, 2026 03:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2026 03:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேப்பூர்: அடிப்படை வசதிகள் நிறைவேற்ற கோரி கிராம மக்கள் மறியலில் ஈடுபட முயற்சி செய் ததால் பரபரப்பு நிலவியது.

வேப்பூர் அடுத்த கீரம்பூர் கிராமத்தில், 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு குடிநீர், தெரு மின் விளக்கு, மாணவர்களுக்கு பஸ் வசதி செய்ய கோரி, நல்லுார் பி.டி.ஓ.,விடம் மனு அளித்தும் பலனில்லை. இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள், 50க்கும் மேற்பட்டோர், நேற்று மாலை 6:00 மணியளவில் விருத்தாசலம்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

தகவலறிந்து வந்த இன்ஸ்பெக்டர்கள் வேப்பூர் பழனிசாமி, விருத்தாசலம் பிரதீப் சந்திரன் ஆகியோர் கிராம மக்களிடம் சமரச பேச்சில் ஈடுபட்டனர். அதில், கிராம மக்களின் கோரிக்கைகளை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதி அளித்தனர். பின், மாலை 6:15 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us