தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குடிநீருக்காக சாலை மறியல்

 குடிநீருக்காக சாலை மறியல்

 குடிநீருக்காக சாலை மறியல்


ADDED : ஏப் 26, 2026 09:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 26, 2026 09:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: குடிநீர் வேண்டி, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

விருத்தாசலம் அடுத்த மு.பட்டி கிராமத்தில் உள்ள வடக்கு தெருவில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடந்த ஒரு வாரமாக ஊராட்சி நிர்வாகம் முறையான குடிநீர் வழங்கவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் குடிநீர் தேடி அலையும் அவலம் ஏற்பட்டது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எவ்வித பயனும் இல்லை.

இதில், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை விருத்தாசலம் - மு.பரூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், அதிகாரிகளிடம் கூறி, உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். அதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us