ADDED : ஆக 21, 2026 03:30 PM
ராமநத்தம், ஆக. 22–
ராமநத்தம் அருகே புதிய நகரில் சாலை அகலம் குறைவாக உள்ளதாகக்கூறி, கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
ராமநத்தம் அடுத்த வெங்கனுார் தெற்கு தெருவில் உள்ள புதிய நகர் பகுதியில் 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். புதிய நகர் குடியிருப்பில் வசிக்கும் குருமூர்த்தி என்பவர் தனது வீட்டுமனையை வருவாய்த்துறை மூலம் அளவீடு செய்தபோது, 12 அடி அகல சாலை என தெரிந்தது. குருமூர்த்தி பொய் சொல்வதாகக்கூறி, அதே பகுதியைச் சேர்ந்த அகிலா தலைமையில் அப்பகுதி மக்கள் நேற்று பகல் 11:30 மணியளவில் வெங்கனுார் கிராம சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த ராமநத்தம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சாமிநாதன் மற்றும் வருவாய்த்துறையினர் அவர்களை சமதானம் செய்து, பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். அதைத்தொடர்ந்து, பகல் 11:45 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
