தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மின்வெட்டை கண்டித்து சாலை மறியல்

 மின்வெட்டை கண்டித்து சாலை மறியல்

 மின்வெட்டை கண்டித்து சாலை மறியல்


ADDED : ஜூன் 11, 2026 08:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 11, 2026 08:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: மின்வெட்டைக்கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

கடலுார் அடுத்த அன்னவெளி கிராமத்தில் நேற்றுமுன்தினம் காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டு பணிகள் நடந்தது.

அதன்பின் மற்ற பகுதிகளுக்கு மின் வினியோகம் வழங்கப்பட்ட நிலையில், அன்னவெளி காலனி பகுதிக்கு மின் வினியோகம் வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் இரவு 10:40 மணிக்கு கடலுார் விருத்தாசலம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த முதுநகர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக அறிவுறுத்தினர். இதையேற்று 11:00 மணிக்கு கலைந்து சென்றனர். தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் பிரச்சினையை சரிசெய்து மினிவினியோகம் வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us