ADDED : ஜன 21, 2026 06:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்: தினமலர் செய்தி எதிரொலியாக, பால்வாத்துண்ணான்-மணிக்கொல்லை இணைப்பு சாலை , சீரமைக்கும் பணி நடக்கிறது.
பால்வாத்துண்ணான்-மணிக்கொல்லை பகுதியை இணைக்கும் வகையில், இணைப்பு சாலை வழியாக அப்பகுதியை சேர்ந்தவர்கள், புதுச்சத்திரம் பகுதிக்கு சென்று வருகின்றனர்.
இந்த சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது.
இது குறித்து 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
அதைத்தொடர்ந்து 2025-26 ம் ஆண்டு நபார்டு நிதி உதவி திட்டத்தின்கீழ், ரூ.47.05 லட்சம் மதிப்பில், 1,380 மீட்டர் தொலைவிற்கு, புதிய தார் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் அப்பகுதியினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

