தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பஸ் ஸ்டாண்டில் சாலை சேதம் பயணிகள் கடும் அவதி

 பஸ் ஸ்டாண்டில் சாலை சேதம் பயணிகள் கடும் அவதி

 பஸ் ஸ்டாண்டில் சாலை சேதம் பயணிகள் கடும் அவதி


ADDED : ஜன 23, 2026 06:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2026 06:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் பஸ் நிலையத்தில் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

கடலுார் பஸ் நிலையத்தில் இருந்து தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதனால், தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். பஸ் வெளியே வரும் வழியிலும், டாஸ்மாக் கடை எதிரிலும் ஜல்லிகள் பெயர்ந்து சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனை அதிகாரிகள் நிரந்தரமாக சீரமைக்க நடவடிக்கை எடுப்பதில்லை. பெயரளவில் மட்டுமே சீரமைத்து விட்டு சென்று விடுகின்றனர்.

இதனால், சாலை நாளுக்கு நாள் அதிகளவில் சேதமாகி வருகிறது. பஸ் பள்ளத்தில் ஏறி இறங்கும் போது, பயணிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

சில நேரங்களில் இருசக்கர வானகங்களில் செல்வோர் கீழே விழுந்து காயமடைகின்றனர்.

அதனால், சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us