/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாலையில் விளக்கு பழுது: வாகன ஓட்டிகள் அச்சம்
/
சாலையில் விளக்கு பழுது: வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : ஜூலை 29, 2025 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : பண்ருட்டியில் இருந்து பாலுார் வழியாக கடலுார் செல்லும் சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சாலையோரம் சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டது. இதில், பெரும்பாலான விளக்குகள் எரியாமல் காட்சிப் பொருளாகவே உள்ளன.
மேலும், சாலையில் உள்ள வேகத்தடைகளில் பதிக்கப்பட்ட பிரதிபலிப்பான் விளக்குகளும் பழுதாகியுள்ளது. இதனால் சாலையில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது . வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர்.
எனவே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சாலையோர விளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.