ADDED : செப் 21, 2024 06:29 AM

நெய்வேலி: நெய்வேலி நகரில் சாலை உரிமை தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
நெய்வேலி நகரம் முழுவதும் என்.எல்.சி . நகர நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில்.
நெய்வேலி டவுன்ஷிப் வளாகத்திற்குள் அரசு மற்றும் தனியார் வாகனங்கள் நேற்று ஒரு நாள் மட்டும் என்.எல்.சி. பாதுகாப்பு படையினரின் அனுமதி பெற்று பயணித்தனர். நெய்வேலிஆர்ச் கேட், அம்மேரி கேட், முத்தாண்டிக்குப்பம் கேட், சொரத்தூர் கேட், இந்திரா நகர் கேட்,கைக்கேளார்குப்பம் கேட், மற்றும் வில்லுடையான்பட்டு முருகன் கோயில் கேட் ஆகிய 7 நுழைவாயிலில் இலவச பாஸ் கொடுத்து வாகனங்களை அனுமதித்தனர்.
சாலை உரிமை தினம் ஆர்ச் கேட் வளாகத்தில் நேற்று காலை துவங்கியது.என்.எல்.சி.,பாதுகாப்பு படையின் முதன்மை பாதுகாப்பு அதிகாரி சிவசுப்பிரமணியன் தலைமை தாங்கினார் .என்.எல்.சி.,நகர நிர்வாக முதன்மை பொது மேலாளர் சிந்து பாபு இலவச அனுமதி வழங்கி துவக்கி வைத்தார். நெய்வேலி டி .எஸ் .பி ., சபியுல்லா மற்றும் என்.எல்.சி., போக்குவரத்து துறை பொது மேலாளர் அறிவுமணி முதன்மை விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை என்.எல்.சி.,பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு துறையினர் செய்திருந்தனர்.