/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சி.எஸ்.எம்., கல்லுாரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
/
சி.எஸ்.எம்., கல்லுாரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
சி.எஸ்.எம்., கல்லுாரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
சி.எஸ்.எம்., கல்லுாரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
ADDED : ஏப் 19, 2025 06:34 AM

விருத்தாசலம்; விருத்தாசலம் அடுத்த எருமனுாரில் உள்ள டாக்டர் இ.கே.சுரேஷ் கல்வி குழுமம், சி.எஸ்.எம்., கல்லுாரியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, விழுப்புரம் கோட்ட பொறியாளர் ஹேமலதா தலைமை தாங்கினார். உதவி கோட்ட பொறியாளர்கள் வசந்தபிரியா, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கல்லுாரி முதல்வர் சின்னப்பொண்ணு வரவேற்றார்.
கல்வி குழும தலைவர் சுரேஷ், டீன் கவி பாண்டியன், உதவி பொறியாளர் சங்கர், சாலை ஆய்வாளர் விமலா ராணி மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், சாலை பாதுகாப்பு, போக்குவரத்து விதிமுறைகள் குறித்த வீடியோக்கள் காணொலி காட்சி மூலம் மாணவர்களுக்கு விழப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
துணை முதல்வர் ஜேசுதாஸ் நன்றி கூறினார்.