/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜன 10, 2024 11:18 PM

விருத்தாசலம்: கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, விருத்தாசலம் நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை கோட்ட பொறியாளர் ராஜதுரை தலைமை தாங்கினார். உதவி கோட்ட பொறியாளர் அறிவுக்களஞ்சியம், உதவி பொறியாளர் தனபால் முன்னிலை வகித்தனர்.
சாலை பாதுகாப்பு அலகு கோட்ட பொறியாளர் ஸ்ரீகாந்த், உதவி கோட்ட பொறியாளர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் ராஜசுவேதா ஆகியோர், சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த பேரணியில் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், சாலை ஆய்வாளர்கள், ஊழியர்கள், சாலை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில், சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திய படி நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் இருந்து முக்கிய வீதிகளின் வழியாக பாலக்கரை வரை சென்றனர்.
அப்போது, வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.