/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : பிப் 01, 2024 06:14 AM

வடலூர்;குறிஞ்சிப்பாடியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்பு பேரணி நடந்தது.
கடலுார் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஸ்ரீகாந்த் தலைமை தாங்கினார். உதவி கோட்ட பொறியாளர்கள் பரமேஸ்வரி, ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.
கலெக்டர் அருண்தம்புராஜ், எஸ். பி ராஜாராம் ஆகியோர் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்து, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.
குறிஞ்சிப்பாடி பஸ் நிலையத்தில் துவங்கிய பேரணி முக்கிய வீதி வழியாக மீண்டும் பஸ் நிலையத்தை அடைந்தது.
உதவி பொறியாளர்கள் வினோத், வெங்கடேஷ், இளநிலை பொறியாளர்கள் ஜெகன், ராஜசு, வேதா நெய்வேலி டி.எஸ்.பி. சபியுல்லா, இன்ஸ்பெக்டர்கள் ராஜா வீரசேகர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.