ADDED : நவ 06, 2025 05:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: போக்குவரத்து போலீசார் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
பண்ருட்டி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் முரளி, செந்தில்குமார், தேவநாதன் ஆகியோர் பண்ருட்டி நகர சுற்றுலா வாடகை வேன் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களிடம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.
மேலும், வாகன ஓட்டுநர்கள் முறையான ஓட்டுநர் உரிமம், இன்சூரன்ஸ், தகுதி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்; சீருடையில் வாகனம் இயக்க வேண்டும்; வாகனத்தில் அதிகப்படியான ஆட்களை ஏற்றி சவாரி செல்ல கூடாது; குடிபோதையில் வாகனம் இயக்கக்கூடாது என எச்சரிக்கை செய்தனர்.

