ADDED : ஜன 12, 2026 02:59 AM

அ நிறம் | அளவு
ராமநத்தம்: சாலை பாதுகாப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, ராமநத்தம் போலீசார் சார்பில், ஆட்டோ டிரைவர்களுக்கு சாலை பாதுகாப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி, போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது.
இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தலைமை தாங்கினார். இதில், ஓட்டுநர் உரிமம் பெற்று வாகனங்களை ஓட்டுவோம், சாலையில் விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக பயணிப்போம், மது போதையில் வாகனங்களை இயக்க மாட்டோம் என உறுதி மொழி ஏற்றனர்.
போலீசார், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
