/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டம்
/
சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டம்
ADDED : மார் 14, 2024 11:36 PM

கடலுார்: கடலுாரில் சி.ஐ.டி.யூ., மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட பேரவைக்கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் திருமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சண்முகம் வரவேற்றார். சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் பழனிவேல் துவக்கவுரையாற்றினார்.
மாநில துணைத் தலைவர்கள் மதிவாணன், கருப்பையன் வாழ்த்துரை வழங்கினர். இதில், சாலை போக்குவரத்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் மத்திய அரசின் சட்டத்தொகுப்பை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். தொழிலாளர்கள் மீது விதிக்கப்படும் அநியாய அபராதங்கள் மற்றும் வரிகளை குறைக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அப்போது, சுரேஷ், சண்முகம், பாஷா உட்பட பலர் கலந்து கொண்டனர். மாநில பொதுச்செயலாளர் குப்புசாமி நன்றி கூறினார்.

