/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ.3.86 கோடியில் சாலை பணி; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
ரூ.3.86 கோடியில் சாலை பணி; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ரூ.3.86 கோடியில் சாலை பணி; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ரூ.3.86 கோடியில் சாலை பணி; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஜன 02, 2025 08:30 PM

கடலுார்; கடலுார் அருகே ரூ.3.86 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணியை எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
கடலுார் அடுத்த நாணமேடு சாலை ரூ.3 கோடியே 86 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி நேற்று நடந்தது. அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பணியை துவக்கி வைத்தார்.
பி.டி.ஓ., பார்த்திபன், கோட்ட பொறியாளர் வெள்ளிவேல், உதவி கோட்ட பொறியாளர் சூர்யமூர்த்தி, உதவி பொறியாளர் விமல்ராஜ் முன்னிலை வகித்தனர்.
அப்போது, ஊராட்சி தலைவர் வசந்தா மணிக்கண்ணன், மாறன், கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், கவுன்சிலர் ஜெயா சம்பத், முன்னாள் ஊராட்சி தலைவர் லட்சுமணன், துரை, சுதாகர், ஊராட்சி செயலர் தேன்மொழி, முன்னாள் கவுன்சிலர் வேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.