ADDED : நவ 02, 2025 11:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: வடகிழக்கு பருவமழையையொட்டி, பெண்ணாடத்தில் சாலையோர மண் குவியல் அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் - திட்டக்குடி நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. அதில், மாளிகைக்கோட்டம், சுமைதாங்கி, கடைவீதி, மேற்கு மெயின்ரோடு ஆகிய பகுதியில் உள்ள சாலையோரங்களில் மண் குவியல் அதிகமாக உள்ளது.
இதனால் மழையின்போது, சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி சாலை சேதமாவதுடன், இவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.
அதைத்தொடர்ந்து, திட்டக்குடி உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில், பொக்லைன் உதவியுடன் சாலை பணியாளர்கள் சாலையோரம் குவிந்த மண்ணை அகற்றினர்.

