UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 09:45 PM

அ நிறம் | அளவு
காட்டுமன்னார்கோவில்: திருட்டு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவான குற்றவாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காட்டுமன்னார்கோவில் வடக்கு கொளக்குடி ஜம்ஜம் நகர் கள்ளந்தோப்பைச் சேர்ந்தவர் முகமது ரபீக் மகன் முகமது ஷாஜகான்;24. இவர் மீது கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகள் பல உள்ளது. அதில், காட்டுமன்னார்கோவில் திருட்டு வழக்கில் கைதாகி ஜாமினில் வந்தவர், வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகவில்லை. அதனைத் தொடர்ந்து கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
அதன்பேரில் தலைமறைவாக இருந்த முகமது ஷாஜகானை, காட்டுமன்னார்கோவில் போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
