/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீட்டின் கதவை உடைத்து 2 சவரன் கொள்ளை
/
வீட்டின் கதவை உடைத்து 2 சவரன் கொள்ளை
ADDED : நவ 06, 2024 10:50 PM
விருத்தாசலம் ; விருத்தாசலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து, 2 சவரன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார் கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி விஜயா, 40. இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர்.
இந்நிலையில், தம்பதிகள் இருவரும் கேரள மாநிலத்திற்கு கூலி வேலைக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த மாதம் 5ம் தேதி குமார் தனது குடும்பத்தினருடன் கேரள மாநிலத்திற்கு கூலி வேலைக்கு சென்றுவிட்டார்.
பின்னர் கடந்த 29ம் தேதி திரும்பிவந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதில், அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து, அதில் இருந்த 2 சவரன் நகை, ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து, விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.