/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போலீஸ் நிலையத்தில் காதல் தம்பதி தஞ்சம்
/
போலீஸ் நிலையத்தில் காதல் தம்பதி தஞ்சம்
ADDED : டிச 15, 2024 07:46 AM
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அடுத்த குமராபுரத்தை சேர்ந்த சக்திவேல் மகன் அரவிந்த்ராஜ், 24; தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் மண்டகப்பட்டு பத்மநாபன் மகள் ஹரினிக்கும் காதல் இருந்தது. இதையறிந்த ஹரினியின் பெற்றோர் அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து கடந்த மாதம் நிச்சயம் செய்துள்ளனர்.
ஜனவரி மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் ஹரினி தனது காதலன் அரவிந்த்ராஜீடன் பெற்றோருக்கு தெரியாமல் திருவந்திபுரத்தில் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் நெல்லிக்குப்பம் போலீசில் இருவரும் நேற்று பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் இருதரப்பு பெற்றோரையும் வரவழைத்து சமாதானம் செய்து அனுப்பினார்.