ADDED : செப் 26, 2025 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் துறைமுகம் அருகே கூரை வீடு தீப்பற்றி எரிந்ததில், ரூ. 50ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது.
கடலுார் அடுத்த பச்சையாங்குப்பத்தைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி,51; இவர் நேற்று முன்தினம் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது மர்மமான முறையில் அவரது வீடு தீப்பிடித்து எரிந்து சேதமானது.
இதில், பீரோ, பிரிட்ஜ், கிரைண்டர் உட்பட 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. புகாரின் பேரில் துறைமுகம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.