/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வியாபாரியிடம் மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடி கைது
/
வியாபாரியிடம் மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடி கைது
ADDED : அக் 15, 2025 12:20 AM

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் வளையல் கடை உரிமையாளரிடம் மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் பார்த்தசாரதி தெருவைச் சேர்ந்தவர் நர்பத்சிங், 49; இவர் அதேபகுதியில் வளையல் மற்றும் அழுகுசாதன பொருட்கள் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், முல்லாதோட்டம் பகுதியை சேர்ந்த கணேசன் மகன் கார்த்திகேயன், 34; என்பவர் நேற்று முன்தினம் நர்பத்சிங்கிடம் மாமூல் கேட்டு மிரட்டி, கொலைமிட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் கார்த்திகேயன் மீது வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனர்.ரவுடி கார்த்திகேயன் மீது கொலை முயற்சி, மாமூல் உள்ளிட்ட 12 வழக்குகள் விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷனில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.