UPDATED : நவ 17, 2026 07:39 PM
ADDED : நவ 17, 2026 07:36 PM

விருத்தாசலம்: குற்ற வழக்கில் ஜாமீன் நிபந்தனையை பின்பற்றாத ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் மணலுார் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் நவீன்ராஜ், 22; சரித்திர பதிவேடு குற்றவாளி. இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட, 7 குற்ற வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், கொலைமுயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த ஜூலை, 19 ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தவர், நிபந்தனைகளை முறையாக பின்பற்றாமல் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
இதன்காரணமாக, அவரது நிபந்தனை ஜாமீனை ரத்து செய்ய கோரி, விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் சந்துரு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்து கோர்ட், நவீன்ராஜ் ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டது. அதன்பேரில், அவரை கோர்ட்டில், ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.
ஏற்கனவே அடிதடி வழக்கில் நிபந்தனையை பின்பற்றாததால், நவீன்ராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
