ADDED : ஜன 16, 2025 05:22 AM

கடலுார் : நெய்வேலி பகுதியில் பல்வேறு கொலை மிரட்டல் வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
நெய்வேலி அருகே செடுத்தான்குப்பத்தை சேர்ந்தவர் ராஜ்குமார், 27; இவர், கடந்த வாரம் கடலுார் அருகே பேர்பெரியாங்குப்பத்தை சேர்ந்த அரவிந்தசாமி என்பவரை முன்விரோதம் காரணமாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து ராஜ்குமாரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட ராஜ்குமார் மீது, முத்தாண்டிகுப்பம் போலீசில் ரவுடி பட்டியல் பராமரிக்கப்படுகிறது.
மேலும், முத்தாண்டிக்குப்பம், நெய்வேலி தெர்மல், நெய்வேலி டவுன்ஷிப், காடாம்புலியூர், கடலூர் முதுநகர் போலீஸ் ஸ்டேஷன்களில் மொத்தம் 15 வழக்குகள் உள்ளது.
இவரின் குற்றசெயலை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடலுார் எஸ்.பி., ஜெயக்குமார் பரிந்துரையின்பேரில், ராஜ்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டார். அதுகுறித்த உத்தரவு நகல், கடலுார் சிறையில் உள்ள ராஜ்குமாரிடம் வழங்கப்பட்டது.