ADDED : செப் 15, 2026 09:53 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: முன்விரோதத்தில் வாலிபரை தாக்கிய ரவுடியை போலீசார் கைது செய்தனர். .
விருத்தாசலம் அடுத்த கோமங்கலத்தை சேர்ந்தவர் திருஞானம் மகன் கிள்ளிவளவன், 24. இவருக்கும், மணலுாரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் ரவுடி நவீன், 22; என்பவருக்கும் முன்விரோதம் உள்ளது.
இந்நிலையில், கடந்த 13ம் தேதி மணலுார் பெட்ரோல் பங்கில், தனது பைக்கிற்கு பெட்ரோல் போட சென்ற கிள்ளிவளவனை, நவீன், ஆதரவாளர்கள் வசந்தகுமார், பிரதாப், ஆனந்தராஜ் ஆகியோர் சேர்ந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து, ரவுடி நவீனை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள வசந்தகுமார் உள்ளிட்ட மூவரை தேடிவருகின்றனர்.,
