/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரவுடி குண்டாசில் சிறையில் அடைப்பு
/
ரவுடி குண்டாசில் சிறையில் அடைப்பு
ADDED : மார் 08, 2024 06:41 AM

கடலுார் : பெரியகாட்டுப்பாளையம் ரவுடி சுதாகர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கடலுார் சிறையில் அடைக்கப்பட்டார்.
பண்ருட்டி அடுத்த பெரியக்காட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் பாண்டியன், ஜெய்சங்கர். அதே ஊரைச் சேர்ந்த செந்தில்முருகன் மகன் சுதாகர் 30; முன்விரோதம் காரணமாக கடந்த 16ம் தேதி சுதாகர், நண்பர்கள் ராஜ், விஜி ஆகியோர் பாண்டியன் வீட்டிற்கு சென்று தாக்கி பைக், வீட்டில் உள்ள பொருட்களை சேதப் படுத்தினர்.
இது குறித்து காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் பலராமன் வழக்குப் பதிவு செய்து சுதாகர், ராஜ் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சுதாகர், மீது காடாம்புலியூர் போலீசார் ரவுடி பட்டியல் பராமரிக்கப்படுவதால், சுதாகர் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் வகையில் எஸ்.பி., ராஜாராம் பரிந்துரையின் பேரில் கலெக்டர் அருண்தம்புராஜ், ஒரு ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் சிறையில் உள்ள சுதாகருக்கு உத்தரவை காடாம்புலியூர் போலீசார் வழங்கினர்.

