/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ. 1 லட்சம் மதிப்பில் புத்தகங்கள்; நுாலகங்களுக்கு எம்.எல்.ஏ., வழங்கல்

ADDED : நவ 12, 2024 08:07 PM

கடலுார் ; கடலுார் மாவட்ட நுாலகங்களுக்கு, ரூ. 1 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை அய்யப்பன் எம்.எல்.ஏ., வழங்கினார்.
கடலுார் மாவட்டத்தில் உள்ள நுாலகங்களுக்கு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கடலுார் மாவட்ட மைய நுாலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட நுாலக அலுவலர் சக்திவேல் தலைமை தாங்கினார்.
அய்யப்பன் எம்.எல்.ஏ., ரூ. 1 லட்சம் மதிப்பில் கருணாநிதி நுாற்றாண்டு நிறைவுமலர் புத்தகங்களை, மாவட்ட மைய நுாலகத்திற்கு வழங்கினார். தொடர்ந்து அந்த புத்தகங்களை மாவட்டத்தில் உள்ள அனைத்து நுாலகங்களுக்கும் வழங்க அறிவுறுத்தினார்.
அப்போது, கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதிபெருமாள், ரவிச்சந்திரன், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், மைய நுாலகர்கள் ஆறுமுகம், கல்பனா, பர்குணன், இந்திராகாந்தி, சண்முகசுந்தரம், வாசகர் வட்ட தலைவர் பாஸ்கரன், எழுத்தாளர்கள் பால்கி, ராஜாஉட்பட பலர் கலந்து கொண்டனர்.